டிராக்டர் மோதி பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம்


டிராக்டர் மோதி பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே டிராக்டர் மோதி பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம்

கடலூர்

நெல்லிக்குப்பம்

நெல்லிக்குப்பத்தை அடுத்த வரக்கால்பட்டை சேர்ந்தவர் இளவழகன்(வயது 25). இவர் சம்பவத்தன்று கொங்கராயனூரை சேர்ந்த நிவேதா(20), நிரோஷா(17) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் திருவந்திபுரம்-பாலூர் சாலை வழியாக அழைத்து சென்று கொண்டிருந்தார். பில்லாலி அருகே வந்தபோது பின்னால் வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி இளவழகன் உள்பட 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story