வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
சிறுமுகை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மேட்டுப்பாளையம்
சிறுமுகை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கத்திமுனையில் பணம் பறிப்பு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையை சேர்ந்தவர் திருமலைச்செல்வன். இவர் நேற்று முன்தினம் இரவு சிறு முகை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த சிலர் அவரை வழிமறித்த னர்.
பின்னர் அவர்கள், திடீரென கத்தியை காட்டி மிரட்டி திருமலைச் செல்வனிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்து விட்டு தப்பி சென்ற னர். இதுகுறித்த புகாரின் பேரில் சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
3 பேர் கைது
இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக காருடன் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த கார்த்தி, வீராசாமி, நந்தகுமார் என்பதும், அவர்கள் தான் திருமலைச்செல்வனிடம் பணம் பறித்தும் தெரியவந்தது. உடனே அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட ்டது. பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். கைதான 3 பேர் மீதும் சிறுமுகை, மேட்டுப் பாளையம், பெரியநாயக்கன்பாளையம் என பல்வேறு இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.