3 பேருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை


3 பேருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 11 Feb 2023 1:00 AM IST (Updated: 11 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

வாழப்பாடி:-

வீ்ட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் 3 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வாழப்பாடி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

கொள்ளை

வாழப்பாடி அருகே உள்ள மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 62). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவரும், இவரது மனைவி ராஜாமணியும், கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந் தேதி காலை, பழனி முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

பின்னர் மறுநாள் அதிகாலை 2 மணியளவில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்ட நிலையில் வீடு திறந்து கிடந்ததோடு, பீரோக்களில் வைத்திருந்த 40½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, சின்னசாமி காரிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

3 பேர் கைது

அதன் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (33). பொன்னம்மாபேட்டையை சேர்ந்த அமிர்ஜான் (34), செல்வராஜ் என்கிற சாகுல் ஹமித் (53) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த கும்பலிடம் இருந்து 40 பவுன் தங்க நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

6 ஆண்டு சிறை

இது குறித்த வழக்கு விசாரணை வாழப்பாடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் நடந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி வீ்ட்டின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட மணிகண்டன், அமிர்ஜான், செல்வராஜ் என்கிற சாகுல் ஹமித் ஆகிய 3 பேருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சன்மதி தீர்ப்பளித்தார்.


Next Story