வாடிப்பட்டி அருகே 3 பேருக்கு கத்திக்குத்து; மோட்டார் சைக்கிள் பறிப்பு


வாடிப்பட்டி அருகே 3 பேருக்கு கத்திக்குத்து; மோட்டார் சைக்கிள் பறிப்பு
x

வாடிப்பட்டி அருகே 3 பேரை கத்தியால் குத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

மதுரை

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பசும்பொன் நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் ரமேஷ் (வயது 36). தச்சுத்தொழிலாளி. நேற்று இரவு 8 மணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று அங்குள்ள மதுபான கடையில் மது வாங்கினார். பின்னர் அருகில் உள்ள காட்டு பகுதிக்கு சென்று வாகனத்தை நிறுத்திவிட்டு மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் அங்கு வந்து ரமேஷிடம் செல்போன் கேட்டனர். அதற்கு ரமேஷ் எதற்காக செல்போன் கேட்கிறீர்கள் என்று கேட்டபோது அதில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரமேஷின் இடதுபுற தலையில் குத்தினார். இதில் ரமேஷ் தலையில் ரத்த காயம் ஏற்பட்டது. அப்போது சத்தம் கேட்டு அருகில் நடந்து வந்த குட்லாடம்பட்டியை சேர்ந்த தவம்(30) மற்றும் விருமாண்டி(35) ஆகியோரையும் அந்த மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதில் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் மோட்டார் சைக்கிளை பறித்து சென்று விட்டனர். இதில் காயமடைந்த ரமேஷ், தவம், விருமாண்டி ஆகியோர் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story