நெகமம் பகுதியில் பொது இடங்களில் மது குடித்த 3 பேர் கைது

நெகமம் பகுதியில் பொது இடங்களில் மது குடித்த 3 பேர் கைது
x

நெகமம் பகுதியில் பொது இடங்களில் மது குடித்த 3 பேர் கைது

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணப்பெருமாள் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் நெகமம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நெகமம் அடுத்த ரங்கம்புதூர் வாய்க்கால் மேடு அருகே பொது இடத்தில் விருகல்பட்டியை சேர்ந்த மாரிமுத்து (வயது 35) என்பவர் மது குடித்து கொண்டு இருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சின்னேரிபாளையத்தை சேர்ந்த சிவசாமி (45), பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அஜய்குமார்(22) ஆகியோர் பொது இடத்தில் மது குடித்ததாக கைது செய்யப்பட்டனர்.

Next Story