காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 3 பேர் கைது


காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 3 பேர் கைது
x

காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 3 பேர் கைது

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம் கடைவீதியில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியது

பேராவூரணியில் இருந்து திருச்சிற்றம்பலம் வழியாக அதிவேகத்தில் வந்த ஒரு கார் சம்பவத்தன்று இரவு 7 மணியளவில் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளை மீது மோதிவிட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது கடைவீதியில் இருந்த போலீசார், அந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. இதுகுறித்து செருவாவிடுதியில் உள்ள திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து போலீசார் அந்த காரினை நெடுவாசல் பிரிவு சாலையில் மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்த 4 பேரில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்ற 3 பேரையும் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

விசாரணையில் அவர்கள் திருத்துறைப்பூண்டி கோவிலூரைச்சேர்ந்த லோகேஷ் (வயது30), அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (28), பேராவூரணி அருகே உள்ள பழைய நகரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாராமன் (23), அதே பகுதியை சேர்ந்த நீலகண்டன் (20) ஆகியோர் என்பதும், அவர்கள் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த காரை பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய நீலகண்டனை தேடிவருகின்றனர்.


Related Tags :
Next Story