கடையில் பட்டாசு தயாரித்த 3 பேர் கைது
கடையில் பட்டாசு தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயசண்முகநாதன் மற்றும் போலீசார் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள மயிலாடும்துறை பகுதியில் உள்ள பட்டாசு கடையில் அரசு உத்தரவுப்படி திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு கடையில் அனுப்பன்குளத்தை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 40), தெய்வானை (35), வீரலட்சுமி (32) ஆகியோர் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து 2 பெட்டி பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். பட்டாசு ஆலைகளில் பட்டாசு தயாரிக்கும்போது விபத்து ஏற்பட்டு உயிர்பலி நடக்க வாய்ப்பு இருக்கும் நிலையில் பட்டாசு கடைகளில் தற்போது பட்டாசு உற்பத்தி செய்வது அதிகரித்துள்ளது. இதில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி இதுபோன்ற விதிமீறல்களை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.