மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேர் கைது
பெரியகுளம் பகுதியில் மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி
பெரியகுளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரட்டூர் பிள்ளையார் கோவில் அருகே அரசு அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த தங்கபாண்டி (வயது 34), அழகர்சாமிபுரம் பகுதியில் மதுபாட்டில்கள் வைத்திருந்த கோட்டை தெருவை சேர்ந்த சுரேஷ் (39) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 86 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், தென்கரை போலீசார் கைலாசப்பட்டி பகுதியில் ரோந்து சென்றபோது மதுபாட்டில்கள் வைத்திருந்த அதே ஊரை சேர்ந்த அம்ச கொடி (37) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 34 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story