ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது


ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது
x

பட்டுக்கோட்டையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை நகர போலீசார் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் திரவுபதி அம்மன் கோவில் தெரு பகுதிக்கு சென்ற போது, அங்கு மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்ற 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பட்டுக்கோட்டை தேரடி தெருவைச் சேர்ந்த விக்ரம்(வயது34), கோட்டை சிவன் கோவில் தெருவை சேர்ந்த முத்து மணிகண்டன்(24), தலையாரி தெரு பகுதியை சேர்ந்த கட்டை அருண் என்ற அருண்குமார் (37) என்றும் அவர்கள் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story