மது விற்ற 3 பேர் கைது


மது விற்ற 3 பேர் கைது
x

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் மாவட்டம், குமாரமங்கலம் மற்றும் குளித்தலை சுங்ககேட் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் குமாரமங்கலம் பகுதிக்கு சென்ற போலீசார் குமாரமங்கலம் 3 ரோடு பகுதியில் மது விற்ற அண்ணாவி (வயது 45), குமாரமங்கலம் பகுதியில் தனது வீட்டின் பின்புறம் வைத்து மது விற்ற ரஞ்சித் (35), குளித்தலை சுங்ககேட் பகுதியில் மது விற்ற மணத்தட்டை பகுதியை சேர்ந்த மாணிக்கம் (31) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 17 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story