மது விற்ற 3 பேர் கைது


மது விற்ற 3 பேர் கைது
x

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

இலுப்பூர் அருகே மேலப்பட்டி டாஸ்மாக் கடையின் அருகே மது விற்பதாக பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் இலுப்பூர் மேலப்பட்டி அரசு டாஸ்மாக் கடை பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த எண்ணை பகுதியை சேர்ந்த சிதம்பரம் (வயது 50), கோட்டை தெருவை சேர்ந்த அசோக் (45), வடுகர் தெருவை சேர்ந்த கணேசன் (53) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 59 மது பாட்டில்கள், ரூ.3 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story