மது விற்ற 3 பேர் கைது
மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உடையார்பாளையம் அருகே நல்லணம் மேட்டுத்தெருவை சேர்ந்த அண்ணாதுரை (வயது 55), சவுந்தரராஜன் (46), சுத்தமல்லி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில் (43) ஆகியோர் அப்பகுதியில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story