மதுவிற்ற 3 பேர் கைது


மதுவிற்ற 3 பேர் கைது
x

கொல்லிமலையில் மதுவிற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

கொல்லிமலையில் கள்ளத்தனமாக மதுபானங்களை சந்துக்கடைகளில் விற்பனை செய்வதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. இதையடுத்து அவர் கண்காணித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

அதன்பேரில் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கொல்லிமலையில் கூட்டு தணிக்கை மேற்கொண்டனர். இதில் ஆரியூர் நாட்டை சேர்ந்த வெங்கடாசலம் (வயது46), செல்வராஜ் (45), ஜெயக்குமார் (43) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து சட்டவிரோதமாக மதுபானங்கள் ஏதும் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.


Next Story