சாராயம் விற்ற 3 பேர் கைது


சாராயம் விற்ற 3 பேர் கைது
x

சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 42) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார், மணிகண்டனை பிடித்து கைது செய்து அவரிடமிருந்த 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ஊராங்காணி ஏரிக்கரை அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குரும்பலூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (34), நத்தகுளம் அருகில் சாராயம் விற்ற அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த பிச்சன்(65) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து மொத்தம் 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story