சாராயம் விற்ற 3 பேர் கைது
சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடியாத்தத்தை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் சாராயம் விற்பதாக வந்த புகார்களின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில், குடியாத்தம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் அடுத்த கூடநகரம் அண்ணா நகர் பகுதியில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது அந்த பகுதியில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த கூட நகரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் வசந்த் (வயது 34), வினோத்குமார் (30) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தலா 150 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து போலீசார் அழித்தனர்.
இதேபோல் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் அடுத்த பூங்குளம் பகுதியில் சோதனை செய்தபோது பூங்குளம் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்த கார்த்தி (40) என்பவர் சாராயம் விற்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 150 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.