சாராயம் விற்ற 3 பேர் கைது
திருமருகல் அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்
திட்டச்சேரி:
திருமருகல் அருகே ஏனங்குடி பகுதியில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது ஏனங்குடி பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கயத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்த ராசப்பன் மகன் நாகராஜன் பிரபு (வயது 34), கீழசன்னாநல்லூர் பாப்பா குளத்தெருவை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்தி (28) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் ஆதலையூர் சுடுகாடு பகுதியில் சாராயம் விற்ற ஏலங்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அப்பாசாமி மகன் மகாலிங்கம் (49) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story