பொள்ளாச்சியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது


பொள்ளாச்சியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மது விற்பனை

பொள்ளாச்சி பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார் தன்னாட்சியப்பன் கோவில் வீதி, மரபேட்டைவீதி, வஞ்சிபுரம் பிரிவு வாய்க்கா மேட்டு ஆகிய பகுதிகளில் அதிரடியாக ரோந்து சென்றனர்.

3 பேர் கைது

அப்போது தன்னாட்சியப்பன் கோவில் வீதியில் மது விற்பனை செய்ததாக கார்த்திக் (வயது 31) என்பவரிடம் 16 மதுபாட்டில்களும், மரபேட்டை வீதியில் நாகராஜ் (55) என்பவரிடமிருந்து 10 மதுபாட்டிகளும், வஞ்சிபுரம் பிரிவு வாய்க்கா மேட்டில் நாட்டரசன் கோட்டை சேர்ந்த மயில்சாமி (46) என்பவரிடமிருந்து 26 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.


Next Story