புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 Aug 2023 6:45 PM GMT (Updated: 21 Aug 2023 6:45 PM GMT)

புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம்


விழுப்புரம் முத்தோப்பு பகுதியில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சுகுமாறன் (வயது 64) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 19 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் வளவனூர் பஜார், வளவனூர் சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக வளவனூர் பாலாஜி நகரை சேர்ந்த விமல்ராஜ் (29), குமாரகுப்பம் சீனிவாசன் (45) ஆகிய இருவரையும் வளவனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்து அவர்கள் இருவரிடமிருந்தும் தலா 10 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story