புகையிலைப்பொருட்கள் விற்ற 3 பேர் கைது


புகையிலைப்பொருட்கள் விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 6 Oct 2022 7:45 PM GMT (Updated: 6 Oct 2022 7:45 PM GMT)

கன்னிவாடி, கோபால்பட்டி பகுதியில் புகையிலைப்பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

கன்னிவாடி அருகே உள்ள தருமத்துப்பட்டியை சேர்ந்தவர் திருமலை ராசு (வயது 57). இவர், தருமத்துப்பட்டியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர், தனது கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப்பொருட்களை விற்பனை செய்வதாக கன்னிவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கன்னிவாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.


போலீசாரை கண்டதும் திருமலை ராசு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றார். போலீசார் விரட்டி சென்று அவரை மடக்கிப் பிடித்தனர். மேலும் அவர் கடையில் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 1 கிலோ புகையிலைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


இதேபோல் கன்னிவாடி அருகே உள்ள கோனூரை சேர்ந்தவர் கோவிந்தன் (52). இவர், அதே பகுதியில் புகையிலைப்பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கன்னிவாடி போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கோபால்பட்டியில் பெட்டிக்கடையில் புகையிலைப்பொருட்கள் விற்ற ஹரிகிருஷ்ணன் (45) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ¾ கிலோ புகையிலைப்பொருட்களை கைப்பற்றினர்.



Next Story