புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

திருச்சி - கரூர் புறவழி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த பேக்கரியில் வைத்து புகையிலை பொருட்களை விற்ற குளித்தலை அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி (வயது 36) என்பவரை கைது செய்தனர். மேலும் அந்த கடையில் இருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் குளித்தலை போலீசார் பரிசல்துறை சாலை அருகே உள்ள தனியார் பள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை செய்தபோது. அவர்களிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் திருச்சி மாவட்டம் முசிறி பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் (38), ஆமூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 2 கிலோ எடைகொண்ட ரூ.4 ஆயிரத்து 500 மதிப்புள்ள புகையிலைப் பொருட்களையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் போலீஸ்சார் பறிமுதல் செய்துள்ளனர்.


Next Story