சங்கராபுரம் பகுதியில் புகையிலை பொருட்களை விற்ற 3 பேர் கைது; கடைகளுக்கு சீல் வைப்பு


சங்கராபுரம் பகுதியில் புகையிலை பொருட்களை விற்ற 3 பேர் கைது; கடைகளுக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 6 Jun 2023 6:45 PM GMT (Updated: 7 Jun 2023 1:31 AM GMT)

சங்கராபுரம் பகுதியில் புகையிலை பொருட்களை விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனா். மேலும் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என்று சங்கராபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, லோகேஸ்வரன் தலைமையிலான போாலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடுவனூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் சேகர் (வயது 47), ஏழுமலை மனைவி சாந்தி (37), பூட்டை கிராமம் அப்துல்ரகீம் மகன் அப்துல்கலாம் (47) ஆகியோர் தங்களது பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்து. இதையடுத்து 3 பேரையும் போலிசார் கைது செய்தனர். மேலும், வருவாய் ஆய்வாளர்கள் கல்யாணி, நிறைமதி, கிராம நிர்வாக அலுவலர்கள் விஜயராஜா, ரவி ஆகியோர் நேரில் சென்று, பெட்டி கடைகளுக்கு சீல் வைத்தனர்.


Next Story