லாரிகளில் செம்மண் கடத்திய 3 பேர் கைது


லாரிகளில் செம்மண் கடத்திய 3 பேர் கைது
x

லாரிகளில் செம்மண் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் ரவுண்டானா பகுதியில் நேற்று முன்தினம் தச்சநல்லூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 3 லாரிகளை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் லாரிகளில் உரிய அனுமதியின்றி செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர்களான ராஜவல்லிபுரத்தை சேர்ந்த அடைக்கலம் மகன் சுடலைமுத்து (வயது 31), தாழையூத்து ஸ்ரீநகரை சேர்ந்த முத்துபாண்டி மகன் வேல்முத்து (30), மாயாண்டி மகன் கைலாசம் (43) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 3 லாரிகள், 7 யூனிட் செம்மண் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story