விவசாயியிடம் 25 பவுன் நகை பறித்த 3 பேர் கைது


விவசாயியிடம் 25 பவுன் நகை பறித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2023 12:00 AM GMT (Updated: 20 Oct 2023 12:00 AM GMT)

உப்புக்கோட்டை அருகே விவசாயியிடம் 25 பவுன் நகை பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

உப்புக்கோட்டை அருகே உள்ள குண்டல்நாயக்கன்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் ரவிமுத்து (வயது 53). விவசாயி. இவர் கடந்த 17-ந்தேதி இரவு தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரவிமுத்து அணிந்திருந்த 25 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கோகுலகண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் ரவி முத்துவிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற வழக்கில் குண்டல்நாயக்கன்பட்டி மேற்குத் தெருவை சேர்ந்த சித்திரை செல்வன் (39) மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த கிருஷ்ணன் (40), புவனேஸ்வரன் (39) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story