அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேர் கைது


அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேர் கைது
x

நீடாமங்கலம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் 2 மினிலாரிகளை பறிமுதல் செய்தனர்

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் 2 மினிலாரிகளை பறிமுதல் செய்தனர்.

ரோந்து பணி

நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் நீடாமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த மினிலாரியை நிறுத்தி அதில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் வலங்கைமான் வட்டம் நார்த்தாங்குடி தெற்கு தெருவைச் சேர்ந்த ராகவன் (30), வெள்ளங்குழியை சேர்ந்த சரபோஸ்(40) என்பதும், இவர்கள் வெள்ளங்குழி பாமனியாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததும் தெரிய வந்தது.

3 பேர் கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் ராகவனையும், மினிலாரி உரிமையாளர் சரபோசையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மினிலாரியை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் பாமனி ஆற்றில் இருந்து மினிலாரியில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த நீடாமங்கலம் வட்டம் வெள்ளங்குழி வடக்குத்தெருவை சேர்ந்த அரவிந்தன் (24) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மினிலாரியை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story