கள் தயாரித்து விற்க முயன்ற 3 பேர் கைது


கள் தயாரித்து விற்க முயன்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 May 2023 12:30 AM IST (Updated: 18 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடி அருகே கள் தயாரித்து விற்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புளியங்குடி சுப்ரமணியபுரம் மேற்கு தொடர்ச்சி மலை ராமர் கோவில் அருகே காட்டுப்பகுதியில் 3 பேர் அடங்கிய கும்பல், சட்ட விரோதமாக கள் தயாரித்து விற்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் புளியங்குடி சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்த குருசாமி மகன் திலகராஜ் (48) மற்றும் அதே பகுதியை சேர்ந்த லட்சுமணகனி (53), ஆறுமுகம் (61) ஆகியோர் என்பதும், பனங்கள்ளில் போதைக்காக ஊமத்தங்காய் சேர்ந்து கள் தயாரித்து விற்பனைக்கு முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து தியாகராஜ் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்ததுடன் அங்கிருந்த 5 லிட்டர் கேனில் விற்பனைக்கு வைத்திருந்த கள்ளையும் தரையில் கொட்டி அழித்தனர்.

1 More update

Next Story