மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் சிக்கினர்


மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 11 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-12T00:15:58+05:30)

மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் சிக்கினர்

கோயம்புத்தூர்

பேரூர்

கோவையை அடுத்த வேடபட்டி, பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் குருபிரசாத் (வயது 23). இவர் தனது நண்பர்களான ஹரிகிருஷ்ணா, கவுதம், சஞ்சய் குமார் ஆகியோருடன் 2 மோட்டார் சைக்கிளில் நரசிபுரம் ரோடு சின்னாறு அணைக்கட்டு அருகே சென்றனர். அங்கு அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அணைக்கட்டை பார்க்க சென்றனர். அவர்கள் திரும்பி வந்து பார்த்த போது ஒரு மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இது குறித்த புகாரின் பேரில் ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடியதாக பூலுவபட்டியை சேர்ந்த ராஜீவன் (வயது 21) மற்றும் 2 சிறுவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.



Next Story