கார் மரத்தில் மோதி 3 பேர் காயம்
ராசிபுரம் அருகே கார் மரத்தில் மோதி 3 பேர் காயம் அடைந்தனர்.
ராசிபுரம்
ராசிபுரம் அருகே உள்ள ஆயில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாஜலம். (வயது 53). விவசாயி. நேற்று காலையில் வெங்கடாஜலம் அவரது மனைவி பழனியம்மாள் (51), தாயார் பூவாயி ஆகியோர் ஒரு காரில் மருத்துவ பரிசோதனைக்காக ராசிபுரம் நோக்கி புறப்பட்டு சென்றனர். காரை வெங்கடாஜலம் ஓட்டிச் சென்றார். அவர்கள் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள சின்ன காக்காவேரி என்ற இடத்தில் சென்றபோது காரை ஓட்டிச் சென்ற வெங்கடாஜலத்திற்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த 3 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது பற்றி நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.