பஸ் மீது மொபட் மோதி 3 பேர் படுகாயம்
பாணாவரம் அருகே பஸ் மீது மொபட் மோதி 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேலூா் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த செதுக்கரை கிராமத்தை சோ்ந்தவர் விமல்ராஜ். இவரது மகள் மகா (வயது 6). குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். அரையாண்டுத் தேர்வு விடுமுறை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த மேல்வீராணம் பகுதியில் உள்ள தனது பாட்டி விஜயா (60) வீட்டிற்கு வந்திருந்தாள். இந்த நிலையில் நேற்று செதுக்கரை கிராமத்திற்கு விஜயா, சிறுமி மகா மற்றும் உறவினர் மகன் சதீஷ் (15) ஆகியோர் மொபட்டில் பாணாவரம் பகுதியில் அமைந்துள்ள சோளிங்கர் ெரயில் நிலையத்துக்கு சென்றனர்.
மேட்டுமங்களம் அருகே வந்த போது தொழிலாளா்களை ஏற்றி செல்ல நின்றிருந்த தனியார் நிறுவன பஸ் மீது எதிா்பாராத விதமாக மொபட் மோதி, அதில் சென்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். ்அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மகா ரத்தனகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், விஜயா மற்றும் சதீஷ் ஆகியோர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த சம்வம் குறித்து பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.