திருவெண்ணெய்நல்லூர் அருகேநாட்டுவெடிகள் வெடித்ததில் 3 பேர் படுகாயம்


திருவெண்ணெய்நல்லூர் அருகேநாட்டுவெடிகள் வெடித்ததில் 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 July 2023 12:15 AM IST (Updated: 29 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே நாட்டுவெடிகள் வெடித்ததில் 3 பேர் படுகாயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி


திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கோவுலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் செந்தில்குமார் (வயது 40). இவர் திருவிழா மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு நாட்டு வெடிகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் செந்தில்குமார் மற்றும் தொழிலாளர்கள் சிலர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக திறந்தவெளி பகுதியில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதில் செந்தில்குமார் தீக்காயமடைந்தனர்.

வலியால் அலறிய அவரை காப்பாற்ற அருகில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சரவணம்பாக்கத்தை சேர்ந்த மாரிமுத்து மனைவி மகேஸ்வரி (35), பண்ருட்டி அங்குசெட்டிபாளையத்தை சேர்ந்த குப்புசாமி (60) ஆகியோர் ஓடி வந்தனர். அப்போது அவர்கள் 2 பேரும் வெடி விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வெடி வெடித்ததில் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.


Next Story