தண்டவாளத்தில் கிடந்த காரில் சிக்கி தவித்த 3 பேர்


தண்டவாளத்தில் கிடந்த காரில் சிக்கி தவித்த 3 பேர்
x

பள்ளத்தில் பாய்ந்து தண்டவாளத்தில் கிடந்த காரை பார்த்த பொதுமக்கள் உடனடியாக டார்ச்லைட்டை அடித்து ரெயிலை நிறுத்தி 3 பேரின் உயிரை காப்பற்றினர்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை

பள்ளத்தில் பாய்ந்து தண்டவாளத்தில் கிடந்த காரை பார்த்த பொதுமக்கள் உடனடியாக டார்ச்லைட்டை அடித்து ரெயிலை நிறுத்தி 3 பேரின் உயிரை காப்பற்றினர்.

தண்டவாளத்தில் கிடந்த கார்

குளச்சல் ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் (வயது 46). இவருடைய மகள் ஆஷா (24). ஆஷாவின் மகள் செரியா (4). இவர்கள் ஒரு காரில் திங்கள்சந்தையில் இருந்து அழகியமண்டபம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

இந்த கார் நேற்று இரவு நெய்யூர் அருகே ெரயில்வே மேம்பாலத்தில் செல்ல முயன்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமுள்ள 25 அடி ஆழமுள்ள பள்ளத்திற்குள் பாய்ந்தது. இதனை கவனித்த பொதுமக்கள் ஓடி வந்து மீட்க முயன்றனர். கார் தண்டவாளத்தில் கிடந்தது. அந்த சமயத்தில் நாகர்கோவில் நோக்கி பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வந்தது.

ரெயிலை நிறுத்திய மக்கள்

உடனே பொதுமக்கள் டார்ச்லைட்டை அடித்தபடியும், சைகை காட்டியபடியும் இருந்தனர். சுதாரித்துக் கொண்ட டிரைவர் ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டு 3 பேர் உயிர் காப்பாற்றப்பட்டது. இதற்கிடையே அங்கு இரணியல் தீயணைப்பு நிலைய அதிகாரி பிரதீப்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். பின்னர் காருக்குள் சிக்கி பரிதவித்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் தண்டவாளத்தில் கிடந்த காரை அப்புறப்படுத்தினர். இதனால் ரெயில் அங்கிருந்து ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

அதே சமயத்தில் நாகர்கோவிலில் இருந்து மற்றொரு ரெயில் வந்தது. அந்த ரெயில் இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இந்த ரெயிலும் மீட்பு பணி முடிந்த பிறகு தாமதமாக சென்றதாக ரெயில்வே அதிகாரி தெரிவித்தார்.


Next Story