மீண்டும் கொள்ளை முயற்சி:அரிவாளுடன் வந்த 3 பேர் தப்பி ஓட்டம்செஞ்சியில் பரபரப்பு


மீண்டும் கொள்ளை முயற்சி:அரிவாளுடன் வந்த 3 பேர் தப்பி ஓட்டம்செஞ்சியில் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Aug 2023 12:15 AM IST (Updated: 6 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சியில் அரிவாளுடன் வந்த 3 பேர் தப்பி ஓடிவிட்டனா்.

விழுப்புரம்


செஞ்சி,

செஞ்சி நகரம் முனுசாமி தெரு, பெரியகரம் ரங்கசாமி தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவம் நிகழ்ந்து வருகிறது. அதன்படி சமீபத்தில் 2 வீடுகள் மற்றும் அங்குள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் உண்டியல், சாமி கழுத்தில் இருந்த நகைகளையும் முகமூடி கொள்ளையர்கள் 3 பேர் திருடி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள காண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் 3 பேர் கையில் அரிவாள்களுடன் முனுசாமி தெருவுக்குள் திருடுவதற்காக வந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர்.

சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதை பார்த்ததும், 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். பொதுமக்கள் துரத்தி சென்றும், அவர்கள் சிக்கவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story