வீட்டிற்கு தீ வைத்த 3 பேர் கைது


வீட்டிற்கு தீ வைத்த 3 பேர் கைது
x

வீட்டிற்கு தீ வைத்த 3 பேர் கைது

நாகப்பட்டினம்

வேதாரண்யத்தை அடுத்த கடிநெல்வயல் கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் மாதவன் (வயது22). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சதாசிவத்தை, அதே ஊரை சேர்ந்த கந்தசாமி என்பவர் கொலை செய்துள்ளார். இதனால் மனமுடைந்த மாதவன் கடந்த 21-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா் கலியபெருமாள் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். இந்தநிலையில் தனது தந்தை, தம்பி ஆகியோரின் சாவுக்கு காரணமான கந்தசாமி வீட்டிற்கு மாதவன் சகோதரர்கள் மார்க்ஸ்(30), ஏங்கல்(27), அவர்களது உறவினர் கலைமணி(20) ஆகிய 3 பேரும் சேர்ந்து தீவைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story