துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது


துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது
x

காரியாபட்டி அருகே துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரணன் மற்றும் போலீசார் குரண்டி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குரண்டி பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 23) என்பவர் வீட்டின் முன்பு நாட்டு துப்பாக்கியுடன் பாலமுருகன், புல்லூர் கிராமத்தை சேர்ந்த சோனை (23), சிவன் (21) ஆகிய 3 பேரும் நின்று கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற போது அவர்களை போலீசார் விரட்டி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலமுருகன் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை புல்லூர் கிராமத்தை சேர்ந்த விஜய் என்ற விஜி என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த பாலமுருகன் உள்பட 3 பேரை ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Related Tags :
Next Story