வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
தளி,
உடுமலையில் வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வழிப்பறி
உடுமலையை அடுத்த முக்கோணம் பகுதியை சேர்ந்த ஜனநாதன் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 20). கேட்டரிங் சர்வீஸ் செய்து வருகிறார். இவர் கடந்த 11-ந் தேதி உடுமலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கேட்டரிங் வேலை முடித்து விட்டு இரவு 10 மணியளவில் தாராபுரம் ரோடு டாஸ்மார்க் கடை அருகே அமர்ந்து இருந்ததாக தெரிகிறது.
அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் கோபாலகிருஷ்ணனை மிரட்டி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரத்து 500 -ஐ பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன் உடுமலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
3 பேர் கைது
இந்த வழிப்பறியில் உடுமலை காமராஜர் நகரைச் சேர்ந்த மோகன்ராஜ் (40), யு.கே.பி. நகரைச் சேர்ந்த சக்திவேல் (29), காமராஜர் தெருவை சேர்ந்த சீனிவாசன் (46) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.