ரூ.26 லட்சம் தாமிர கம்பிகள் திருடிய 3 பேர் கைது


ரூ.26 லட்சம் தாமிர கம்பிகள் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே ரூ.26 லட்சம் தாமிர கம்பிகள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே ரூ.26 லட்சம் தாமிர கம்பிகள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாமிர கம்பிகள் திருட்டு

ஓட்டப்பிடாரம் அருகே சாமிநத்தம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மர்ம நபர்கள் அடிக்கடி தாமிர கம்பியை திருடிச் சென்றனர். அப்போது, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்கள் திருடிச் செல்லும் ்காட்சிகள் பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மர்ம நபர்கள் தாமிர கம்பியை திருடிக் கொண்டு இருந்தனர். அவர்கள், போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிள், செல்போனை போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டனர். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரூ.26 லட்சம் மதிப்பு

மேலும் சம்பவ இடத்திற்கு மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது, ரூ.26 லட்சம் மதிப்பிலான தாமிர கம்பிகள் திருடப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மர்ம நபர்களை பிடிக்க தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.

3 வாலிபர்கள் கைது

விசாரணையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் சிங் என்ற மணி (வயது 29), வேலாயுதபுரம் நடுத்தெருவை சேர்ந்த வேல்முருகன் (28), கீழ வேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரைச்செல்வம் (22) ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான தாமிர கம்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story