நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
ராசிபுரம்
ராசிபுரம் டவுன் வி.நகர் ரோடு எண்.4 பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி லோகம்மாள் (வயது 62). இவர் நேற்று முன்தினம் காலையில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்று இட்லி மாவு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென்று லோகம்மாள் கழுத்தில் அணிந்திருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர். இது பற்றி லோகம்மாள் ராசிபுரம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இந்த வழிப்பறி சம்பந்தமாக போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள பதிவுகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.