மணல் கடத்திய 3 மொபட்டுகள் பறிமுதல்
மணல் கடத்திய 3 மொபட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் தனது உதவியாளர்களுடன் கிராம ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது கோடாலிகருப்பூர் விநாயகர் கோவில் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, 3 மொபட்டுகளில் தலா 3 மூட்டை மணல்களுடன் மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்களிடம் மணல் எடுப்பதற்கு எந்தவித அரசு அனுமதியும் இல்லாததால் மணல் மூட்டைகளையும், மொபட்டுகளையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேர் குறித்து விசாரணை செய்து வருகிறார்.
Related Tags :
Next Story