திருப்பத்தூரில் கார் மோதி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


திருப்பத்தூரில் கார் மோதி பள்ளி மாணவர்கள் 3 பேர்  உயிரிழப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
x

திருப்பத்தூர், வாணியம்பாடியில் கார் மோதி உயிரிழந்த 3 பள்ளி மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், வளையாம்பட்டு கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிரிசமுத்திரம் அரசுப் பள்ளிக்கு இன்று காலை சைக்கிளில் சென்று கொண்டிருந்த வளையாம்பட்டு எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த ரபிக் த/பெ.சாமுவேல் (வயது 13), விஜய், த/பெ.ராஜி (வயது12), மற்றும் சூர்யா, த/பெ.ராஜி (வயது 10) ஆகிய மூன்று மாணவர்கள் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி மூவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடைய ஆழ்ந்த நண்பர்களுக்கு எனது இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story