அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்ற உள்ள 3 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்


அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்ற உள்ள 3 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்
x

புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் 3 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றுக்கொண்டார். அமைச்சர் மெய்யநாதனிடம் கூடுதலாக இருந்த விளையாட்டுத்துறை, புதிதாக அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் 3 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இணைந்து பணியாற்ற உள்ளனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளராக்க அதுல்ய மிஸ்ரா ஐ.ஏ.எஸ்., சிறப்பு திட்ட அமலாக்கத்துறை செயலாளராக உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்., வறுமை ஒழிப்பு திட்டம் மற்றும் ஊரக கடன்கள் துறை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ்., ஆகியோர் உள்ளனர்.

இந்த 3 துறைகளும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 3 துறைகளின் செயலாளர்களாக உள்ள 3 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story