3 பாம்புகள் பிடிபட்டன


3 பாம்புகள் பிடிபட்டன
x

நாட்டறம்பள்ளி அருகே 3 பாம்புகள் பிடிபட்டன.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே உள்ள வேட்டப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று நுழைய முயன்றுள்ளது. இதை பார்த்ததும் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று வீட்டின் வராண்டாவில் இருந்த 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பை, பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் பச்சூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் வீட்டிற்குள் பாம்பு நுழைந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் சென்று வீட்டின் அருகே இருந்த 4 அடி நீள நாகப்பாம்பை பிடித்தனர். மேலும் நாட்டறம்பள்ளியை அடுத்த வெள்ளாளனூர் பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் வீட்டின் அருகே நிலத்தில் இருந்த 7 அடி நீளமுள்ள சாரை பாம்பையும் தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


Next Story