ஒரே நாளில் 3 பாம்புகள் பிடிபட்டன


ஒரே நாளில் 3 பாம்புகள் பிடிபட்டன
x

நாட்டறம்பள்ளி அருகே ஒரே நாளில் 3 பாம்புகள் பிடிபட்டன.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பந்தாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது வீட்டின் அருகில் உள்ள பள்ளத்தில் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது 2 நல்ல பாம்புகள் இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று பள்ளத்தில் பதுங்கியிருந்த 5 அடி மற்றும் 3 அடி நீளமுள்ள 2 நல்ல பாம்புகளை பிடித்தனர்.

இதேபோல் சின்ன கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்த அகிலன் என்பவரது வீட்டில் அருகில் பாம்பு வந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் சென்று 3 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை பிடித்தனர். பிடிபட்ட பாம்புகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.


Next Story