மண் கடத்திய 3 பேர் கைது


மண் கடத்திய 3 பேர் கைது
x

களக்காடு அருகே மண் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வு குளத்தில் அரசு செம்மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. இதை பயன் படுத்தி சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படுவதாக வருவாய்துறையினருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து நாங்குநேரி மண்டல துணை தாசில்தார் சந்திரஹாசன் மற்றும் வருவாய்துறையினர் அங்கு சென்று சோதனையிட்டனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் தோளப்பன் பண்ணையை சேர்ந்த அசோக், மருகால்குறிச்சியை சேர்ந்த ராமர், நாங்குநேரி தம்பு புரத்தை சேர்ந்த கந்தையா ஆகியோர் போலி அனுமதி சீட்டை பயன்படுத்தி, ெபாக்லைன் எந்திரம், டிராக்டர்கள் மூலம் செம்மண் கடத்தியது தெரியவந்தது. இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அசோக் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரம், 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story