ரெயிலில் அடிபட்டு 3 புள்ளிமான்கள் பலி
அரக்கோணம் அருகே ரெயிலில் அடிபட்டு 3 புள்ளிமான்கள் பலியானது.
ராணிப்பேட்டை
அரக்கோணம் - திருப்பதி ரெயில் மார்க்கத்தில் கைனூர் கேட் அருகே நேற்று அதிகாலை வழிதவறி வந்த 3 புள்ளிமான்கள் அரக்கோணத்தில் இருந்து திருத்தணி சென்ற புறநகர் ரெயிலில் அடிப்பட்டு தண்டவாளம் அருகே இறந்து கிடந்தன.
இது குறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று இறந்து கிடந்த மான்களின் உடல்களை மீட்டனர். மேலும் இதுகுறித்து ராணிப்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினரிடம் இறந்த 3 மான்களை போலீசார் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story