சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு
திமுக எம்.பி.-க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோரும் உடன் உள்ளனர்
சென்னை,
மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநில முதல்-மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்தவகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்து பேசினார்.
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மானும் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின்போது, மத்திய அரசு கொண்டுவந்த அவசர சட்டத்தின் பாதகம் குறித்தும், மத்திய அரசு ஒருதலைபட்சமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக்கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story