மயில் வேட்டையாடிய 3 வாலிபர்கள் கைது
ரிஷிவந்தியம் அருகே மயில் வேட்டையாடிய 3 வாலிபர்கள் கைது துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் பறிமுதல்
கள்ளக்குறிச்சி
ரிஷிவந்தியம் அருகே உள்ள மருவூர் பகுதி சாலையில் வனவர் முருகன் தலைமையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சிக்கிளில் நாட்டு துப்பாக்கியுடன் வந்த 3 பேரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது அதில் 3 மயில்கள் தோகைகள் எடுக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டனர்.
விசாரணையில் அவர்கள் மையனூர் கிராமத்தைச் சேர்ந்த கிரிஸ்டோ மகன் பாஸ்கல்ராஜ் (வயது 31), ஜோசப் மகன் பிரவீன்குமார்(28), பெரியபகண்டை சவரிமுத்து மகன் அருள் ஆனந்தராஜ்(25) என்பதும், இவர்கள் அந்த பகுதியில் நாட்டு துப்பாக்கியால் மயில்களை வேட்டையாடி எடுத்து வரும்போது சிக்கியதும் தெரியவந்தது. இது குறித்து இந்திலி வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து 3 மயில்கள், நாட்டு துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.