வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் போதைப் பொருட்கள் பறிமுதல்


வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் போதைப் பொருட்கள் பறிமுதல்
x

அரக்கோணம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

3 டன் போதைப்பொருட்கள்

அரக்கோணத்தை அடுத்த கைனூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக அரக்கோணம் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வீட்டில் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள 3 டன் போதைப் பொருட்கள் சுமார் 200 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அரக்கோணம் பழனிபேட்டை பகுதியை சேர்ந்த லட்சுமி காந்த் (வயது 33) என்பது தெரிய வந்தது.

வாலிபர் கைது

அதைத்தொடர்ந்து குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து லட்சுமிகாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story