3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 12 Sept 2023 1:15 AM IST (Updated: 12 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்
கோவை


கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


வாகன சோதனை


குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறை டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவின்படி கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், போலீசார் இருகூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி டெம்போ வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் கேரளாவிற்கு கடத்துவதற்காக 2,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ரேஷன் அரிசி கடத்திய கோவையை சேர்ந்த அய்யாதுரை என்ற சுரேஷ் (வயது 36) என்பவரை கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் மதுக்கரையை சேர்ந்த சுதாகரை போலீசார் தேடி வருகின்றனர்.


கைது


இதேபோல் பொள்ளாச்சி குடிமைப்பொருள் குற்றபுலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் கோவை -பாலக்காடு ரோடு நவகரையில் உள்ள கோவில் அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் 800 கிலோ ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.


இதையடுத்து ரேஷன் அரிசி கடத்திய உக்கடத்தை சேர்ந்த முகமது பரூக்கை கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி, கார் பறிமுதல் செய்யப்பட்டது. கோவையில் ஒரே நாளில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை கைது செய்து,. 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story