லாரியில் கடத்திய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
லாரியில் கடத்திய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
லாரியில் கடத்திய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனை
விருதுநகர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விருதுநகர் அருகே உள்ள கே.உசிலம்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
லாரியில் 80 மூடைகளில் 3.2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. போலீசார் லாரியுடன் ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைது
லாரி மற்றும் அரிசி உரிமையாளரான மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த ரேவந்த் (வயது 24), மற்றும் அவருடன் வந்த மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ராகவபாண்டி (22) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் ரேஷன் அரிசியை சேகரித்து நாமக்கல் கோழிப்பண்ணைகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.