வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

வேலூரில் பாழடைந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வேலூர்

வேலூரில் பாழடைந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வீடு, வீடாக சோதனை

வேலூர் பில்டர்பெட் சாலையில் உள்ள வீட்டில் வெளிமாநிலங்களுக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகளில் பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூர் குடிமைப்பொருள் தனி தாசில்தார் சத்தியமூர்த்தி தலைமையில் வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் குழுவினர் அந்த பகுதிக்கு சென்று வீடு, வீடாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கலாஸ் நிமந்தக்கார தெருவில் உள்ள பாழடைந்த வீட்டினுள் ஏராளமான பிளாஸ்டிக் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதனால் சந்தேகம் அடைந்த குடிமைப்பொருள் குழுவினர் வீட்டிற்குள் சென்று மூட்டைகளை திறந்து பார்த்தனர். அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.

3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

இதையடுத்து அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகளை அங்கு பதுக்கி வைத்த நபர்கள் குறித்து குடிமைப்பொருள் குழுவினர் விசாரித்தனர். ஆனால் அதுபற்றி எதுவும் தெரியாது என்று பொதுமக்கள் தெரிவித்து விட்டனர்.

இதையடுத்து குடிமை பொருள் குழுவினர் அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 59 மூட்டைகளில் இருந்த சுமார் 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் அந்த வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்த நபர்கள் குறித்து


Next Story