விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
கடலூர்

ராமநத்தம்,

ராமநத்தம் அருகே கண்டமத்தான் கிராமத்தை சேர்ந்தவர் பாலையா. இவருடைய மனைவி பத்மா (வயது 46). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் பட்டாக்குறிச்சி கிராமத்தில் உள்ளது கடந்த 4 நாட்களாக விவசாய நிலத்துக்கு பத்மா செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பத்மா தனது விவசாய நிலத்துக்கு சென்றார்.

அப்போது அங்குள்ள கொட்டகையில் அவருக்கு தெரியாமல் மர்மநபர்கள் சிலர், ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது கண்டு பத்மா அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் உடனே கிராமநிர்வாக அலுவலர் (பொறுப்பு) பழனிமுத்துவிடம் தகவல் அளித்தார். இதையடுத்து அவர் அளித்த தகவலின் பேரில் திட்டக்குடி வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன், கடலூர் குடிமை பொருள் பறக்கும் படை தாசில்தார் பன்னீர்செல்வம், துணை தாசில்தார் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அ்ங்கு 60 மூட்டைகளில் இருந்த 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

வலைவீச்சு

பி்ன்னர் அதனை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை ஆய்வாளர் தரேகாமதி, உதவி ஆய்வாளர் கோபிநாத் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் .குற்றப்பிரிவு புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்மாவின் விவசாய நிலத்தில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story